புழுதி பறக்கும் சாலை

Update: 2025-02-02 10:57 GMT

கோத்தகிரி பகுதியில் அம்ருத் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் நகர் பகுதியில் உள்ள சாலைகள் அனைத்திலும் குழிகள் தோண்டப்பட்டு மண் சாலைகளாக மாறி உள்ளன. அதில் புழுதி பறப்பதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பணிகளை விரைந்து முடித்து சாலைகளை புதுப்பிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்