புதுக்கோட்டை மாவட்டம், சிறுவாச்சூர்- இலுப்பைக்குடி சாலையில் நத்தக்காடு உப்பேரி அருகே உள்ள சாலை பகுதி குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சிலசமயங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடையும் சம்பவமும் நடந்து வருகிறது. எனவே குண்டும், குழியுமான சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.