கொத்தபுரிநத்தம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தினமும் அதிகளவில் பாரம் ஏற்றிக்கொண்டு வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த வாகனங்களால் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சேதமடைந்த சாலையை விரைவில் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.