ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படும் சாலை

Update: 2025-01-26 17:45 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம் ஸ்ரீபுரந்தான் கிராமத்திலிருந்து அரங்கோட்டை வழியாக கோவிந்தபுத்தூர் வரை செல்லும் 3 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையில் ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்