வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?

Update: 2025-01-26 17:24 GMT

தாரமங்கலம் ஊர் சாவடி அருகில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பகுதி பள்ளிக்கூடம் இருக்கும் பகுதி என்பதால் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படாமல் உள்ளது. மேலும் இந்த பகுதியில் இருந்து எம்.ஜி.ஆர். காலனி செல்லும் வழியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த இடத்திலும் வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதன் காரணமாக இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சசிகுமார், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்