மதுரை ஜெய்ஹிந்த்புரம் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் சாலை முதல் பெரியார் பஸ் நிலையம் வரை உள்ள மேம்பாலம் மற்றும் சாலையில் ஆங்காங்கே பெயர்ந்து பள்ளங்களாக உள்ளது. இதனால் அப்பகுதியில் பயணிக்கும் இருச்சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.