கும்பகோணம் பழவத்தான் கட்டளை ஹரிதா நகரில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. தற்போது வரை சாலை அமைக்கும் பணி நிறைவு பெறாமல் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. சாலை முழுவதும் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு இருப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடக்க வேண்டும்.