போடி மேலச்சொக்கநாதபுரம் பகுதியில் பாதாள சாக்கடை பணி, கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி உள்ளிட்டவை தற்போது நடைபெறுகிறது. இதற்காக போடி-தேவாரம் சாலை, காமராஜ் பஜார் சாலை ஆகியவற்றில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அங்கிருந்து அள்ளப்பட்ட மண், சாலையோரத்திலேயே குவித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் பணிகள் முடிந்த பின்னரும் அந்த மண் குவியல் அகற்றப்படவில்லை. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அதோடு வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே மண் குவியலை விரைந்து அகற்ற வேண்டும்.