திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம், கோட்டப்பாளையம் பஞ்சாயத்தை சேர்ந்த வலையபட்டி கிராமத்தில் உள்ள பெரும்பால சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்வோர் வயதானோர் நடந்து செல்லவும், வாகன ஓட்டிகள் செல்லவும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.