திருவள்ளூர் மாவட்டம், பெத்திக்குப்பம், பகவான் நகர் குடியிருப்பு பகுதி உள்ள மண் சாலை மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பள்ளம் தெரியாமல் கீழே விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். சிறிது மழை பெய்தாலே மண்சாலையில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மண்சாலையை, தார் சாலையாக மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.