சென்னை பெரம்பூரில் பள்ளிகூட சாலை உள்ளது. இந்த சாலை சுப்பிரமணியன் சாலை மற்றும் அன்னதான சமாஜம் சாலையை இணைக்கும் 4 முனை சந்திப்பில் உள்ளது. இந்த சாலையில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும், பள்ளிகள் அருகே உள்ளதால் மாணவ- மாணவிகளும் அடிக்கடி விபத்தில் காயம் அடைகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் பள்ளிகூட சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.