சென்னை ஆலந்தூர், நங்கநல்லூர் 167-வது வார்டு, எம்.ஜி.ஆர். மெயின் ரோடு சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலை பிரதான சாலை என்பதால் எப்போதுமே பரபரப்பாக காணப்படும். இந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. மேலும், வாகனங்கள் பழுதடையக்கூடிய சூழலும் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாததால் அதிகமான விபத்துகளும் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகளில் நலன் கருதி மாநகராட்சி அதிகாரிகள் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.