விளவங்கோடு பகுதியில் இருந்து மடிச்சல் செல்லும் சாலையில் இடப்பனம்காடுவிளை உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் பாய்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தண்ணீர் பாய்வதால் சாலையும் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சீரமைத்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.