மூலக்குளம் 100 அடி மேம்பாலம் முதல் அரும்பார்த்தபுரம் பாலம் வரை போடப்பட்டுள்ள புதிய பைபாஸ் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு இருள்சூழ்ந்து கிடக்கிறது. இங்கு இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து மது குடிப்பதால் அந்த வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.