கரூர் மாவட்டம், மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி, அங்கப்பன் நகரில் அமைக்கப்பட்டுள்ள சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த சாலை வழியாக இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.