பண்ருட்டி அடுத்த புறங்கனியில் அமைந்துள்ள ரேஷன் கடை எதிரே சாலையின் நடுவே பெரிய பள்ளம் ஒன்று உள்ளது. இதனால் அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி அந்த பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்பு ஏற்படும் முன் விரைந்து சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.