புதுக்கோட்டை ஒன்றியம் கல்லுக்காரன்பட்டி, வண்ணாரப்பட்டியில் இருந்து கணபதிபுரம் செல்லும் விளக்கு சாலை வரை உள்ள 2 கிலோ மீட்டர் தார் சாலை பல்வேறு இடங்களில் கப்பிக்கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் இந்த சாலையில் நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.