வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2025-01-12 12:40 GMT

அரியலூர் நகரில் செந்துறை சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான கர்ப்பிணிகள், நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் மருத்துவக்கல்லூரி நுழைவு வாயிலின் தென்பகுதியில் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் வேகமாக செல்வதினால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்