பாகோடு அருகே கரும்பறைத்துண்டம் முதல் கோலார்விளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சீரமைக்கப்படாமல் பல ஆண்டுகளாக காணப்படுகிறது. மழை காலங்களில் சாலையின் தண்ணீர் தேங்கி நிற்பதுடன், சேறும், சகதியுமாக மாறுகிறது. இதனால், அந்த வழியாக நடந்து செல்லும் பெண்கள், முதியோர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து கான்கிரீட் சாலையாக மாற்றியமைக்க வேண்டும்.
-ருபின், கோலார்விளை