கடலூர் அடுத்த திருவந்திபுரம் பேருந்து நிறுத்தத்தில் வேகத்தடை உள்ளது. இந்த வேகத்தடை இருப்பது வாகன ஓட்டிகளுக்கு எளிதில் தெரியும் வகையில் அதில் வர்ணம் பூசப்படவில்லை. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சில நேரங்களில் அந்த வேகத்தடையில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க வேகத்தடையில் வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.