சென்னிமலை அருகே உள்ள குமராபுரி முகாசிப்பிடாரியூர் ஊராட்சி முதல் தெருவில் கடந்த 2 மாதங்களாக ரோடு போடப்பட்டது. ஆனால் இதற்காக போடப்பட்ட கல், மணலை தெருவிலேயே போட்டுவிட்டு் சென்றுவிட்டனர். இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே கல், மணலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.