தேனி வைகை அணை பகுதியில் தரைப்பாலத்தில் தற்போது தண்ணீா் வரத்து அதிகமாக உள்ளது. இதன் காரணமாக தரைப்பாலம் முழுவதும் பாசி படர்ந்துள்ளது. மேலும் முறையான பராமரிப்பு இல்லாததால் தரைப்பாலமும் சேதமடைந்த நிலையில் இருக்கிறது. இதனால் எந்த நேரத்திலும் தரைப்பாலம் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே தரைப்பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.