விருதுநகர் அருகே நந்திரெட்டியப்பட்டி கிராமம் முதல் சிவஞானபுரம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால்பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் புதிய தார்சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.