குண்டும்,குழியுமான சாலை

Update: 2025-01-05 14:30 GMT

கும்பகோணம் தாலுகா பழவத்தான்கட்டளை பகுதி விவேகானந்தாநகரில் 5-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் சாலைகள் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து இருக்கிறது. சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள தெருக்களில் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


மேலும் செய்திகள்