ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியத்துக்கு உட்பட்ட மங்களக்குடியில் இருந்து ஊமைஉடையான் கிராமத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக இருப்பதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் புதிய தார்ச்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.