கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி செல்லாண்டிபுரத்திலிருந்து வில்வமரத்துப்பட்டி, நத்தப்பட்டி, சோனம்பட்டி, நல்லமுத்து பாளையம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு தார் சாலை செல்கிறது. இந்த தார் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனநிலையில், தொடர்ந்து பராமரிப்பு இன்றி தற்போது குண்டும், குழியுமாக மாறி உள்ளது. மேலும் அண்மையில் இந்தப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக நத்தப்பட்டி பாறைகளம் பகுதியில் சாலையின் ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.