கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. அதன் எதிரே உள்ள சாலையில் வாகன ஓட்டிகள் வேகமாக செல்வதால் அங்கு அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி குறிப்பிட்ட இடத்தில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.