பிரம்மதேசம் அடுத்த குரூர் ஊராட்சியில் உள்ள சாலைகள் தற்போது பெய்த மழையால் கடும் சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளங்களில் தவறி விழுந்து விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையை விரைந்து சீரமைத்துத்தர வேண்டும் என கிராம மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.
