விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட லட்சுமிபுரம், இடையபட்டல்பட்டி, நூர்சாகிபுரம், அழகு தேவந்திரபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. மேலும் இதில் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள ரெயில்வே சுரங்க பாதையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், மாணவ-மாணவிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.