ஒட்டன்சத்திரம் அருகே புதுச்சத்திரம் முதல் பொம்மநல்லூர் வரை சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு அங்கிருந்து எடுக்கப்பட்ட மண் அதே இடத்திலேயே குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பள்ளத்தை விரைவாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.