சேறும், சகதியுமான சாலை

Update: 2024-12-29 13:25 GMT
துறையூர் வட்டம், சிறு நாவலூர் ஊராட்சிட்பட்ட சி ரெட்டியாபட்டி கிராமத்தில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் கரிகாலி செல்லும் சாலையை கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பய்னபடுத்தி வருகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் மண்சாலையானது சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இதனால் அந்த பகுதிக்கு பஸ்கள் வருவதில்லை. இதனால் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாணவர்களும், வெளியூர் வேலை செய்பவர்களும் நடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்