திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், அலமாதி திருவள்ளுவர் தெரு பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் தெரியாமல் கீழே விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே அந்த சாலைகளில் செல்லும்போது வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.