புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா நாகுடி கிராமத்தில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியின் எதிர்புறம் உள்ள சாலை கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்லவே முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேறும், சகதியுமான சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
,
,