ஊட்டி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் எருமைகள் உள்ளிட்ட கால்நடைகள் கூட்டம், கூட்டமாக சாலைகளில் சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் விபத்துகளும் நடைபெறுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கால்நடைகளை சாலைகளில் சுற்றித்திரியவிடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.