போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

Update: 2024-12-22 17:37 GMT
தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு- பழைய உச்சிமேடு செல்லும் சுமார் 2 கி.மீ. தூரமுள்ள சாலையானது முற்றிலும் சிதிலமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. தினமும் இவ்வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பெயர்ந்து கிடக்கும் கற்களில் இடறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே புதிய தார்சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்