வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2024-12-22 16:43 GMT

சிவகிரி அருகே அம்மன் கோவிலில் உள்ள துணை சுகாதார நிலையம் முன்பு வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகள் மீது வாகனங்கள் மோதி காயம் அடைய வாய்ப்புள்ளது. சில நேரம் உயிரிழப்புகளும் ஏற்படலாம். ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழும் முன் துணை சுகாதார நிலையம் முன் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்