கடமலைக்குண்டுவை அடுத்த மயிலாடும்பாறையில் இருந்து செங்குளம் வழியாக நரியூத்துக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும்.