மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் அல்லிவிளாகம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள மெயின் சாலையோரங்களில் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அப்பகுதியில் கான்கிரீட் போடுவதற்காக இரும்புகம்பிகள் கட்டப்பட்டுள்ளன. இவை சாலையோரத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்து வருகின்றன. பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் அப்பகுதியில் உள்ளவர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.