திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் விளத்தூர் ஊராட்சி வடக்கு தெரு,பெருமாள் கோவில் உள்ளது. இந்த தெருவில் முறையான சாலை வசதி இல்லை. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி தெருவில் உள்ள பாதைகள் சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், மாணவ-மாணவிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து தேவையான இடங்களில் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.