திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வீட்டுவசதி வாரியம் 3-வது மெயின் ரோட்டில் நகராட்சி உயர்நிலைபள்ளி இயங்கிவருகிறது. இந்த பகுதியில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும்அவதி அடைந்து வருகின்றனர். மழைகாலத்தில் மழைநீர் சாலையில் தேங்கி நிற்பதால் பள்ளம் தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து விடும் சம்பவமும் அடிக்கடி நடக்கிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, 2 வருடமாக சீரமைக்கப்படாமல் உள்ள சாலையை சீரமைக்க மாநகராட்சி உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.