நெய்யூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சேனம்விளை பகுதியில் குடிநீர் இணைப்புக்காக புதிதாக போடப்பட்ட தார்ச்சாலையில் பள்ளம் தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டது. இந்த பணிகள் நிறைவடைந்து 3 மாதங்கள் ஆனபிறகும் இதுவரை தார்சாலையை முறையாக சீரமைக்கவில்லை. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடி தார்ச்சாலையை முறையாக சீரமைக்க வேண்டும்.
-ராஜன், சேனம்விளை.