நெல்லிக்குப்பம் அடுத்த வாடிபாக்கம்- மேல்பாதி பிரதான சாலையில் ரெயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரெயில்வே கேட்டின் அருகில் சாலை பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.