திருச்சி மாவட்டம், முசிறி ஒன்றியம் நெய்வேலி ஊராட்சி டாக்டர் அம்பேத்கர் நகர் காலனியில் நெய்வேலி-கொல்லப்பட்டி இணைப்பு சாலை கடந்த பல ஆண்டுகளுக்கு போடப்பட்டது. தற்போது இந்த சாலை குண்டும், குழியுமாக மாறி பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்களும் நடந்து செல்லவே முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.