புதுக்கோட்டை மாவட்டம். ஆலங்குடி தாலுகா கொத்தமங்கலத்தில் இருந்து வடகாடு செல்லும் வழியில் தரைப்பாலம் அருகே மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சாலையோரம் மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் இந்த பள்ளத்தில் விழுந்தால் காயம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.