தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அண்ணாமலை நகர் உள்ளது. இந்த பகுதியில் உள்ள தரைப்பாலத்தின் மேற்பகுதியில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. தேங்கி கிடக்கும் நீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மழைநீர் தேங்கி கிடப்பதால் அந்த வழியாக பொதுமக்கள் சிரமத்துடன் நடந்து செல்கின்றனர். வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?