தஞ்சை அருகே பட்டுக்கோட்டை அருகே பாளமூர்த்தி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தெருக்களில் சாலைகள் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து இருக்கின்றன. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை வசதி செய்து தர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.