தஞ்சை தாலுகா மேலவெளி பஞ்சாயத்து சாய்ராம்நகரில் சாலை வசதி இல்லை. இதனால் மண்பாதையை அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மண்பாதை முழுவதும் சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. பள்ளி வேன்கள், ஆட்டோக்கள் சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். பொதுமக்களும் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.