நாகர்கோவில் வடசேரி ஓட்டுப்புரை தெருவில் சுமார் 200 வீடுகள் உள்ளன. இங்குள்ள குறுகலான சாலையில் முதியோர், குழந்தைகள், பெண்கள் என எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த சாலையில் சமீபகாலமாக தனியார் பள்ளி வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன. இருமுறை பள்ளி வாகனம் மோதி வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் இறந்துள்ளன. இதனால், சாலையில் பொதுமக்கள் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி தெருவில் அதிவேகமாக செல்லும் பள்ளி வாகனங்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வைரலதா, ஓட்டுப்புரை தெரு, நாகர்கோவில்.