கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட நித்திரவிளை குருசடி சாலை மாங்குழி, ஆனப்பந்தி வழியாக செல்கிறது. இந்த சாலையில் பதிக்கப்பட்டுள்ள அலங்கார தரைக்கற்கள் சேதமடைந்து குண்டும்,குழியுமாக காணப்படுகிறது. மேலும், சாலையோரத்தில் மின்விளக்குகளும் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைத்து மின்விளக்குள் அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பத்மநாபன், நித்திரவிளை.