கடலூர் அருகே நடுவீரப்பட்டில் இருந்து குமளங்குளத்திற்கு பிரியும் பிரதான சாலையானது குண்டும், குழியுமாக உள்ளது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?